மும்பையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பை, சாக்கிநாக்கா பகுதியில் கைரானி சாலையில் உள்ள கடை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். நான்கு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தன.
இந்த விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.