இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு - வெளியானது 5 மாநில தேர்தல் அறிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு - வெளியானது 5 மாநில தேர்தல் அறிவிப்பு

newspt

உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உத்தரப்பிரதேம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்ரகண்ட் ஆகிய மாநிலங்களில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், உத்ரகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40, பஞ்சாப் மாநிலத்தில் 117, மணிப்பூரில் 60 தொகுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

கொரோனா, ஒமைக்ரான் பரவும் நேரத்தில் தேர்தல் நடத்துவது சவாலானது. எனினும், கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் தேர்தல் நடத்ததிட்டமிட்டுள்ளோம். கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மற்ற 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளது.