இந்தியா

அசாமில் பாஜக கூட்டணி கட்சி எம்எல்ஏ கொரோனா பாதிப்பால் மரணம்

அசாமில் பாஜக கூட்டணி கட்சி எம்எல்ஏ கொரோனா பாதிப்பால் மரணம்

Veeramani

அசாம் மாநில எம்.எல்.ஏ லெஹோ ராம் போரோ கோவிட் -19 பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

அசாம் மாநில பாஜக அரசின் கூட்டணி கட்சியான யுனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் (யுபிபிஎல்) கட்சியை சேர்ந்த எம்எல்ஏ லெஹோ ராம் போரோ கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இது தொடர்பாக இரங்கல் தெரிவித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "தமுல்பூர் எம்.எல்.ஏ லெஹோ ராம் போரோவின் அகால மறைவுக்கு நான் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன் ... அவரின் மரணம் மாநிலத்திற்கு ஒரு பெரிய இழப்பு" என்று ட்வீட் செய்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் இரண்டாவது எம் எல் ஏ இவராவார், கடந்தவாரம் புதன்கிழமை அசாம் எம்எல்ஏ மஜேந்திர நர்ஸாரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அசாமில் மே 2 ஆம் தேதிதான் தேர்தல் முடிவுகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.