இந்தியா

அசாம் மற்றொரு காஷ்மீராக மாறப்போகிறது: ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா பேச்சு

அசாம் மற்றொரு காஷ்மீராக மாறப்போகிறது: ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா பேச்சு

JustinDurai
'அசாம் மற்றொரு காஷ்மீராக மாறப்போகிறது' என்று ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா பேசினார்.
அசாம் மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, சில்சார் நகரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ''அசாம் மற்றொரு காஷ்மீராக மாறப்போகிறது. சில மக்களின் ஆக்கிரமிப்பால் சத்ரா சமூக மக்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர். தேயிலை பெல்ட் மற்றும் மாநிலத்தின் தொலைதூர எல்லைப் பகுதிகளில் வாழும் இந்துக்களும் ஆக்கிரமிப்பு காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளனர். இவர்களை காப்பாற்ற ஆர்எஸ்எஸ் பகுதிவாரியாகச் சென்று இந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும். சாதாரண மக்களுடன் வலுவான பிணைப்பு இருப்பதால் ஆர்எஸ்எஸ் அதை செய்ய முடியும்.
சமீபத்தில் என்னைச் சந்தித்த புத்த மதக்குருக்கள், பெங்காலி இந்துக்களால் அசாமிய சமூகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தனர். அசாம் மக்கள் இப்போது யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.