இந்தியா

மழை காலத்தை வரவேற்ற கிர் காட்டின் கம்பீரமான ஆண் சிங்கம்

jagadeesh

குஜராத் மாநிலத்தில் கிர் காடுகளில் இருக்கும் இந்திய சிங்கமொன்று வனத்தின் சாலையோரத்தில் இருக்கும் தேங்கி இருக்கும் மழை நீரை குடிக்கும் பழைய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம், ஜுனாகத் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிர் தேசிய பூங்காவில் 520 ஆசிய சிங்கங்கள் உள்ளன. இந்த பூங்காவுக்கு ஆண்டுதோறும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சமமாக வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். வரும் நவம்பர் மாதம் சுற்றுலா சீசன் தொடங்கும். மேலும் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக நான்கு மாதங்கள் கிர் பூங்கா பராமரிப்புக்காக மூடப்படும்.

மேலும் பருவமழைக் காலமான இந்த 4 மாதங்கள் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலம். சிங்கம், புலி, சிறுத்தை உள்பட பல விலங்கினங்கள் இந்த காலத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஆண்டுதோறும் இந்த காலத்தில் பூங்கா மூடப்படும்.மழை அதிகம் பெய்யும் காலம் என்பதால் சாலைகள் மோசமான நிலையில் இருக்கும். வனப் பகுதிக்குள் எளிதாக பயணிக்க முடியாது. அது சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்தானதாக இருக்கும். அதுமட்டுமன்றி, நவம்பர் மாதம் சீசன் தொடங்கவுள்ளதால், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.

இந்நிலையில் கிர் பூங்காவில் இருக்கும் சிங்கமொன்று  பூங்காவின் சாலையோரம் இருக்கும் மழை நீரை குடிக்கும் வீடியோவை வனத்துறை அலுவலர் பர்வீன் கஸ்வான் பகிர்ந்திருந்தார். அதில் கம்பீரமான ஆண் சிங்கமொன்று வால் ஆடிக்கொண்டே மழை நீரை குடிக்கும். இதனை பகிர்ந்த நெட்டிசன்கள் கிர் காடுகளின் ராஜாக்கள் மழையை வரவேற்க தயாராகிவிட்டனர் என தெரிவித்திருக்கின்றனர்.