இந்தியா

இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து ஆடியதை வெட்கமாக உணர்கிறேன்: மம்தா பானர்ஜி

இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து ஆடியதை வெட்கமாக உணர்கிறேன்: மம்தா பானர்ஜி

webteam

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்துவருகிறது. இந்தப் போட்டியில் காற்று மாசு காரணமாக, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நேற்று முன் தினம் அவதிப்பட்டனர். இதனால் சிறிது நேரம் போட்டி பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மாஸ்க் அணிந்து விளையாடினர். இது வெட்கக் கேடானது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ’இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடுவது சரியானது அல்ல. டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இது நாட்டிற்கு நற்பெயரை வாங்கி கொடுக்காது. மாசுபாட்டை டெல்லி அரசு கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு அந்த அரசு உடனடியாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்.