இந்தியா

ஓவைசி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம் - அமித்ஷா இன்று விளக்கம்

ஓவைசி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம் - அமித்ஷா இன்று விளக்கம்

கலிலுல்லா

ஒவைசி மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை 11.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார்

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கடந்த வியாழக்கிழமை அன்று உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு டெல்லி நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போது சாஜர்சி சுங்கச்சாவடி அருகே அவரது கார் மீது 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர் இதில் ஓவைசிக்கு எந்த காயமின்றி தப்பினார் எனினும் அவரது வாகனம் சேதத்துக்கு உள்ளானது இதனை தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முன்வந்த போது அதை ஏற்க மறுத்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளது. இந்நிலையில் காலை 11.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒவைசி மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார். ஏற்கனவே இதே விவகாரத்தில் உத்தரபிரதேச சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே எடுத்துக்காட்டு என எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் அமித்ஷா விளக்கம் முக்கியத்துவம் அளிக்கிறது.