இந்தியா

மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசனுக்கு கூடுதல் பொறுப்பு

webteam

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் ஆளுநராக இருக்கும் நிலையில் அவர்கள் இரண்டு பேருக்கும் கூடுதலாக தலா ஒவ்வொரு மாநிலமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில்  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 2019 ஆம் ஆண்டு தெலங்கானா மாநில  ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

இதே போல பாரதிய ஜனதா கட்சியில் தமிழகத்தின் மூத்த தலைவராக இருந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பை ஏற்று கொண்டார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெகதீஷ் தன்கர் போட்டியிடுவதால் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் மேற்குவங்க ஆளுநராக இல.கணேசனுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: போட்டியே இல்லாமல் தேர்வான குடியரசுத் தலைவர் பெயர் தெரியுமா உங்களுக்கு? குட்டி ரீவைண்ட்!