இந்தியா

ஜேஎன்யூவில் படித்தீர்களா..? பத்திரிகையாளரிடம் பொருளாதார ஆலோசகர் கேள்வி

ஜேஎன்யூவில் படித்தீர்களா..? பத்திரிகையாளரிடம் பொருளாதார ஆலோசகர் கேள்வி

Rasus

வேலைவாய்ப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரிடம், நீங்கள் என்ன ஜேஎன்யூவில் படித்தீர்களா..? என பொருளாதார ஆலோசகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்குபின், பொருளாதார ஆய்வு அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. 2018-19 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) 7 - 7.5 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

இதனிடையே ஆய்வறிக்கை தொடர்பாக பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியத்திடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை குறித்தும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கை குறித்தும் கேட்டார். அதற்கு பத்திரிகையாளரை பார்த்து, “நீங்கள் என்ன ஜேஎன்யூவில் படித்தீர்களா ” என பொருளாதார ஆலோசகர் மறுகேள்வி கேட்டுள்ளார். ஆனால் பத்திரிகையாளரின் கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம்,கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை இடதுசாரி கொள்கையாளராக மறைமுகமாக சித்தரிக்க முயன்றுள்ளதாக இச்செய்கை அங்குள்ளவர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.