இந்தியா

3-வது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் கெஜ்ரிவால்

3-வது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் கெஜ்ரிவால்

Rasus

டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால், பதவியேற்றுக் கொண்டார். தொடர்ச்சியாக 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர், கெஜ்ரிவாலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவையொட்டி ராம்லீலா மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராம்லீலா மைதானம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டதோடு, ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தவிர 6 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.