டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொசு ஒழிப்புத் திட்டத்தை தனது வீட்டில் இருந்து தொடங்கியுள்ளார்.
10 வாரங்களில் 10 மணிக்கு 10 நிமிடங்களில் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். அதாவது ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று காலை 10 மணிக்கு 10 நிமிடங்கள் பொதுமக்கள் தங்கள் வீட்டில் தேவையில்லாமல் தேங்கியிருக்கும் தண்ணீரை வெறியேற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்ற பரப்புரையை அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகம் செய்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக தனது வீட்டில் தேங்கியிருக்கும் தண்ணீரை நீக்கி சுத்தப்படுத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவரைப் போல் பொதுமக்கள் பலரும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.