அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால் pt web
இந்தியா

“பாஜகவினரை ED தொடுவதில்லை; என் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தடுக்க நினைக்கிறாங்க” - கெஜ்ரிவால்

Angeshwar G

டெல்லி மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஏற்கனவே அனுப்பிய 2 சம்மன்களுக்கும் அவர் ஆஜராகாத நிலையில் 3வது சம்மனுக்கும் அவர் ஆஜராகவில்லை.

அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை - அரவிந்த் கெஜ்ரிவால் ArvindKejriwal | ED | BJP

தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் சட்டவிரோதமானது என தெரிவித்ததோடு, வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் அமலாக்கத்துறைக்கு எழுதிய கடிதத்தில் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மூன்றாவது முறையாக விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகாததால், விதிகளின்படி அவருக்கு எதிராக பிணையில்லாத வாரண்ட் பிறப்பித்து, அவரை அமலாக்கத்துறையினரால் கைது செய்யமுடியும். இதைக்கருத்தில்கொண்டு, கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தக்கூடும் என்றும், சோதனைக்குப் பின் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இதை அமலாக்கத்துறை வட்டாரங்கள் மறுத்துள்ளன.

இந்நிலையில், முதல்வர் கெஜ்ரிவால் டிஜிட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, சிபிஐ மற்றும் அமலாக்க துறையின் மூலமாக பாஜக தன்னை மிரட்டுவதாகவும் தன்னை கைது செய்ய வேண்டும் என விரும்புவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ”மணீஷ் சிஷோடியா, சத்தியேந்திர ஜெயின், சஞ்சய் சிங் ஆகியோர் பாஜகவை எதிர்த்தார்கள். அதனால் தான் அவர்கள் தற்பொழுது சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் சிறையில் இருப்பது ஊழல் செய்ததன் காரணமாக அல்ல. பாஜகவில் சேர மறுத்ததால்.

அரவிந்த் கெஜ்ரிவால்

பா.ஜ.க.வில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, அதனால் பா.ஜ.,வுக்கு பயப்படவில்லை. ஊழல் செய்த மற்ற தலைவர்கள் பா.ஜ.,வில் இருந்தால் விசாரணை செய்திருக்க மாட்டார்கள். குற்றம் சட்டப்பட்டவர்கள் பாஜகவில் இணைந்த வழக்குகளில் விசாரணை நிறுத்தப்பட்டது. நான் என்னை முழுமையாக நாட்டிற்காக ஒப்பு கொடுத்து விட்டேன் எனது ஒவ்வொரு மூச்சும் எனது நாட்டிற்காக தான் இருக்கிறது எனது இந்த சண்டை எப்போதும் ஓயாது.

எனது மிகப்பெரிய சொத்து எனது நேர்மை தான். அமலாக்கத்துறை தவறுதலாக எனக்கு சமன் அனுப்புகிறார்கள். பாஜக உடைய குறிக்கோள் என்னை விசாரணை செய்ய வேண்டும் என்பதல்ல. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதுதான்” என்று கெஜ்ரிவால் குற்றச்சாட்டியுள்ளார்.