இந்தியா

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு - அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு கெஜ்ரிவால் அழைப்பு

Sinekadhara

டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், தலைமைச் செயலாளர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை மூடுவது, அலுவலகங்களுக்கான நேரத்தை குறைப்பது உள்ளிட்ட முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. காற்றின் தரத்தை மேம்படுத்த இரு தினங்களுக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தலாமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.