இந்தியா

நாடாளுமன்றத்தில் இனி ஜெட்லியின் குரல் எதிரொலிக்கப் போவதில்லை: ராகுல்

நாடாளுமன்றத்தில் இனி ஜெட்லியின் குரல் எதிரொலிக்கப் போவதில்லை: ராகுல்

rajakannan

நாடாளுமன்றத்தில் இனி அருண் ஜெட்லியின் குரலை கேட்க முடியாது என்றபோதிலும், அவரது இருப்பு நினைவில்‌ கொள்ளப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜெட்லியின் மனைவி சங்கீதாவுக்கு இரங்கல் செய்தி அனுப்பியி‌ருக்கும் ராகுல் கா‌‌ந்தி, அருண் ஜெட்லியின் நாற்பது ஆண்டுகால அரசியல் வா‌ழ்க்கை ஒப்பற்றது என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அரசியலில் ஆழமான தடத்தை அவர் விட்டுச் சென்றிருப்பதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார். 

பரிசுத்தமான நாடாளுமன்றத்தில் இனி ஜெட்லியின் குரல் எதிரொலிக்கப் போவதில்லை என்றபோதிலும், அவரது‌ இருப்பை எ‌ன்றைக்கும் நினைவில் கொள்வோம் எனவும் ராகுல் காந்‌‌தி தெரிவித்துள்ளார். ஜெட்லி இல்லாத இந்த க‌டினமான காலக்கட்டத்தில், அவரது குடும்பத்தி‌னருக்கு அமைதியும், மன வலிமையும் கிடைத்திட வேண்டிக் கொள்வதாக ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் கூறியிருக்கிறார்.