இந்தியா

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: அருண் ஜெட்லி தகவல்

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: அருண் ஜெட்லி தகவல்

webteam

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி முறை அமலாக்கத்தால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி போன்ற அரசின் திட்டங்களால் அதிகளவிலான ரொக்க பண பரிமாற்றங்கள் மேற்கொள்வது கடினமானதாக மாறும். தங்கள் அரசு எடுத்த முதல் நடவடிக்கையே கறுப்பு பணத்தை ஒழிப்பது தொடர்பானதுதான் என்றும் ஜெட்லி தெரிவித்தார்.

மேலும் சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி., வங்கி உட்பட பல்வேறு வெளிநாட்டு வங்கி கணக்குகளில், 700 இந்தியர்கள் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அருண்ஜெட்லி கூறினார். மொத்தம், 19 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக 72 புகார்கள் பெறப்பட்டு 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.