நைலான் உள்ளிட்ட செயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
செயற்கை மாஞ்சா நூல்கள் எளிதில் மட்காத தன்மை கொண்டுள்ளதால் மனித உயிர்களுக்கும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அவை பாதிப்பு ஏற்படுத்துவதாக தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்தர் குமார் தெரிவித்துள்ளார். செயற்கை மாஞ்சா நூல்களை தயாரிக்கவும் இருப்பு வைத்திருக்கவும் வாங்கவும் விற்கவும் முழுமையான தடை விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். கண்ணாடி துண்டுகள் பூசப்பட்ட நூல்களுக்கும் இத்தடை பொருந்தும் என பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்த உத்தரவை பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ளது.