இந்தியா

"ஆரோக்ய சேது செயலி பாதுகாப்பானதாக இல்லை" ராகுல் காந்தி குற்றச்சாட்டு !

"ஆரோக்ய சேது செயலி பாதுகாப்பானதாக இல்லை" ராகுல் காந்தி குற்றச்சாட்டு !

jagadeesh

கொரோனா வைரஸ் பரவலை கண்டறிய பயன்படும் ஆராக்ய சேது செயலி தனி மனிதர்களின் விவரங்களை பாதுகாக்கும் வகையில் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் தகவல்களை வழங்கும் வகையில் 'ஆரோக்கிய சேது' என்ற மொபைல் அப்ளிகேஷனை( செயலி) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டது. நோய் தாக்குதலுக்கு ஆளான நபரின் அருகில் சென்றால் நம்மை எச்சரிக்கை வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

இதனை அனைத்து பொதுமக்களும் தங்கள் மொபைல்போனில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தி இருந்தது. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் "ஆரோக்கிய சேது" ஆப்பை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை சுற்றறிக்கை அனுப்பியது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன் உறுப்பினருமான ராகுல் காந்தி சில கேள்விகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் "ஆரோக்ய சேது மக்களை கண்காணிக்கும் ஒரு அருமையான செயலி. இதனை தனியார் அமைப்பு தயாரித்துள்ளது. அந்நிறுவனத்துக்கு பெரிய சிந்தனைகள் இருப்பதாக தெரியவில்லை. தனி நபர் விவரங்கள், தனி மனித பாதுகாப்புகள் இல்லை. தொழில்நுட்பங்கள் நம்மை பாதுகாக்கும், ஆனால் நம்முடைய சுய ஒத்துழைப்பு இல்லாமல் நமது விவரங்களையும் திருடிவிடும்" என பதிவிட்டிருக்கிறார்.