இந்தியா

சட்டத்தை மீறினாரா அர்னாப்? டைம்ஸ் நவ் புகார்!

சட்டத்தை மீறினாரா அர்னாப்? டைம்ஸ் நவ் புகார்!

Rasus

ரிபப்ளிக் டிவியின் நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி மீது திருட்டுப் புகார் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் சேனலில் சீப் எடிட்டராகப் பணியாற்றியவர் அர்னாப் கோஸ்வாமி. அரசியல் தலைவர்களிடம் இவர் கேட்கும் கேள்விகளால் பரபரப்பாகப் பேசப்பட்டவர். இவர் கேட்கும், ‘த நேஷன் சுட் நோ’ என்ற வார்த்தை மீம்ஸ் உருவாக்குபவர்களால் பிரபலமானது. இவர் டைம்ஸ் நவ் சேனலில் இருந்து பிரிந்து சமீபத்தில் ரிபப்ளிக் டிவியை ஆரம்பித்தார். இவர் மீதும் இவருடன் பணியாற்றும் நிருபர் பிரேமா ஸ்ரீதேவி என்பவர் மீதும் டைம்ஸ் நிறுவனம் திருட்டு புகார் கூறியுள்ளது.

அதாவது, ரிபப்ளிக் டிவி ஆரம்பமான முதல் நாளில், லாலு பிரசாத் யாதவின் ஊழலை வெளிப்படுத்தினர். அப்போது வெளியிடப்பட்ட ஃபோன் உரையாடல், அவர் டைம்ஸ் நவ் சேனலில் பணியாற்றிய போது எடுக்கப்பட்டது என்றும், அதே போல மறைந்த சுனந்தா புஷ்கரிடம் நிருபர் பிரேமா ஸ்ரீதேவி பேசிய டெலிபோன் உரையாடலும் தங்கள் நிறுவனத்தின் பணியாற்றிய போது எடுக்கப்பட்டது என்றும் அதை திருடி இப்படி வெளியிட்டிருப்பது பதிப்புரிமை சட்டத்தை மீறிய செயல் என்றும் புகார் கூறப்பட்டுள்ளது.