ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில், 18 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.
கடுங்குளிருக்கிடையே இந்தோ திபெத் எல்லையில் பாதுகாப்புப் படையினர் யோகாசனங்களை மேற்கொண்டனர். பனிமலை பகுதியான லடாக்கில் தற்போது மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும் நிலையில், வீரர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர்.
உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருவதை ஒட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் குழுவாக யோகா பயிற்சி செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது