ராணுவ டேங்கர்களை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது.
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஸ்பைக் ஏவுகணைகள் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் பெற்றவை. எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல்கள் தொடரும் நிலையில், அவசரத் தேவையை கருத்தில் கொண்டு ராணுவ துணைத் தளபதி தனக்குள்ள அவசர கொள்முதல் அதிகாரத்தை கொண்டு 210 ஸ்பைக் ஏவுகணைகளை கொள்முதல் செய்துள்ளார்.
10 நாட்களுக்கு முன்னரே இவை இந்தியா வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், இஸ்ரேலின் ஸ்பைக் ஏவுகணைகளை வாங்க ராணுவம் திட்டமிட்டது. டிஆர்டிஓ தயாரித்து வரும் அதிநவீன ஏவுகணைகள் தயாராகும் வரை இஸ்ரேலின் ஸ்பைக் ஏவுகணைகளை எல்லையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.