இந்தியா

காஷ்மீருக்கு இன்று செல்கிறார் ராணுவ தளபதி!

காஷ்மீருக்கு இன்று செல்கிறார் ராணுவ தளபதி!

webteam

ராணுவ தளபதி பிபின் ராவத், காஷ்மீருக்கு இன்று செல்கிறார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் பார்வையிடுகிறார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. செல்போன், இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று காஷ்மீர் செல்கிறார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டப்பின் அங்கு அவர் செல்வது இதுவே முதன்முறை. ஜம்மு-காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்கிறார். லடாக் லே பகுதிகளுக்கு அவர் செல்வார் என்று தெரிகிறது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார் என்று கூறப்படுகிறது.