இந்தியா

வளைகுடா பிரச்னை, இந்தியாவை பாதிக்காது: சுஷ்மா

வளைகுடா பிரச்னை, இந்தியாவை பாதிக்காது: சுஷ்மா

webteam

கத்தாருடன் ஏற்பட்டுள்ள வளைகுடா நாடுகளின் பிளவு இந்தியாவை பாதிக்காது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

இயற்கை வாயு மற்றும் எண்ணெய் வளத்தில் செழித்து விளங்கும் கத்தார், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள், கத்தார் நாட்டுடன் இருந்த தூதரக உறவை முறித்துக்கொண்டன. இதனால், தரை, கடல் மற்றும் வான்வழி தொடர்புகளும் துண்டிக்கப்டுகின்றன. 

இதுதொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இது வளைகுடா ஒத்துழைப்புக் குழுவின் உள்நாட்டு பிரச்சனை என்றும், வளைகுடா நாடுகளின் இந்த பிளவு இந்தியாவை பாதிக்காது என்றும் தெரிவித்தார். 
மேலும், தற்போது உள்ள சூழ்நிலையில் இந்தியர்கள் யாரும் சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் அக்கறையாகச் செயல்படுகிறோம் என சுஷ்மா தெரிவித்தார்.