ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டர் பதிவு குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமானப் பயணம் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார். பிரிட்டீஷ் விமானத்தில் பயணம் செய்வதற்கான பதிவு அது. அந்தப் படத்தில் ரஹ்மானின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதாவது, அல்லா-ரக்கா ரஹ்மான் ( Allahrakka Rahman) என்ற அவரது முழுப் பெயர் மட்டுமே அதில் உள்ளது.
ஆனால், இந்த ட்விட்டர் பதிவு குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதாவது, குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஹ்மான் இந்தப் பதிவினை செய்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளார். நேரடியாக எதனையும் பேச முடியாததால், குறியீடுகளை வைத்து அவர் பேசுவதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.