Headlines  pt
இந்தியா

Headlines |குமரி அனந்தன் மறைவு, நீட் விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, குமரி அனந்தன் மறைவு, நீட் விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது.

  • நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுத் தந்தவர் என்ற பெருமைக்கு உரியவர் குமரி அனந்தன். பனை விவசாயிகளின் பாதுகாவலராகவும் திகழ்ந்தவர்.

  • தந்தை குமரி அனந்தனின் உடலை கட்டியணைத்து கண்ணீர்விட்டு கதறி அழுத தமிழிசை சௌந்தரராஜன்.

  • நீட் விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம். திமுக அரசு நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு.

  • தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு. கூட்டாட்சி கட்டமைப்பு மற்றும் மாநில சட்டப்பேரவையின் ஜனநாயக உரிமைகளை தீர்ப்பு உறுதிப்படுத்தி இருப்பதாக கருத்து.

  • அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர். அலுவலகத்தில் வைத்து மூன்றே முக்கால் மணி நேரம் விசாரித்த பின்னர் மீண்டும் இல்லத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை.

  • எண்ணூர் முகத்துவாரம் மீனவ குப்பத்தில் ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மோதல். வீட்டில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டதால் கைகலப்பு.

  • சென்னையில் மின்சார ரயில் பயணத்தின்போது அட்டகாசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள். வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அடாவடி.

  • மத்திய அரசின் உதவியை நாடிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இறால்களுக்கு கூடுதல் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுகோள்.

  • அமெரிக்காவில் உத்தரவை மீறி தங்கி இருக்கும் அகதிகளிடம் அபராதம் வசூலிக்க முடிவு. நாள் ஒன்றுக்கு 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டம்.

  • பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ். மஹாராஷ்டிர மாநில பாஜக தலைவர் முன்னிலையில் கட்சியில் ஐக்கியம்.

  • ஐபிஎல் லீக் சுற்றில் தொடர்ந்து 4ஆவது போட்டியில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். நேற்றைய போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் பணிந்தது.

  • "பேரன்பும் பெருங்கோபமும்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜாவின் பாடல்களை பாடி அசத்திய சீமான். எந்த மைதானமாக இருந்தாலும் நன்றாக விளையாடும் தோனியை போல், எல்லா விதமான படங்களுக்கும் இசையமைப்பவர் இளையராஜா என புகழாரம்

  • எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணி. அறிவியல் புனைவுக் களத்தில் பிரமாண்டமாக தயாராகயிருக்கும் புதிய படம்.