Headlines pt
இந்தியா

Headlines|சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு முதல் புதிய சாதனை படைத்த விராட் கோலி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு முதல் புதிய சாதனை படைத்த விராட் கோலி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தென் வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி. வளிமண்டல சுழற்சி காரணமாக காவிரி படுகையில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

  • வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு. விலை உயர்வு இன்று முதல் அமலாகிறது.

  • சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம். நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரியவேண்டுமா அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா எனக் கேள்வி.

  • சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் முன்னணியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் பயணம்.

  • திருச்சியில் அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் நடந்த அமலாக்கத் துறை சோதனை நிறைவு. 10 மணி நேரம் நடந்த ரெய்டில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல்.

  • டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கைவேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் இன்று விசாரணை.

  • பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு.

  • ஆந்திர துணை முதல்வரின் வாகன அணிவகுப்பால், 25 மாணாக்கர் ஜே.இ.இ தேர்வில் பங்கேற்க முடியவில்லை என குற்றச்சாட்டு. பவன் கல்யாண் பயணத்திற்கும், மாணாக்கர் தாமதமாக சென்றதற்கும் தொடர்பில்லை என காவல் துறை விளக்கம்.

  • இந்தியாவில் பட்டியலின மக்கள் 2ஆம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர் என பிகாரில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

  • பாஜகவுடனான கூட்டணி 2009லேயே முடிந்துவிட்டதாக பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் திட்டவட்டம். வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவாக தங்கள் கட்சி எம்பி ஒருவர் வாக்களித்திருந்த நிலையில் விளக்கம்.

  • சீனா தங்களுக்கு விதித்த 34% வரியை இன்றைக்குள் வாபஸ் பெறாவிட்டால் நாளைக்கு அதற்கு 50% வரி போடுவோம் என்ற ட்ரம்ப்பின் அறிவிப்பால் மேலும் சூடுபிடித்த வணிக யுத்தம்.

  • மும்பைக்கு எதிரான விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி. ரஜத் பட்டிதார், விராட் கோலியின் விளாசலால் மும்பை மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பின் முதல் வெற்றி.

  • டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. உலக அளவில் கிறிஸ் கெயில், அலெக்ஸ் ஹேல்ஸ், சோயிப் மாலிக், பொல்லார்டுக்கு அடுத்த இடத்திற்கு உயர்ந்தார்.

  • டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள்-8 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு. மே 23ஆம் தேதி உலகெங்கும் படத்தை வெளியிட திட்டம்.