Headlines pt
இந்தியா

Headlines|உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி முதல் மீண்டும் ஹைதராபாத் அணி பரிதாப தோல்வி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி முதல் நிதி குறித்து பிரதமர் மோடி அளித்த பதில் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை. ஆலங்கட்டி மழையுடன் சூறைக்காற்றுடன் மழையும் பொழிந்து மக்களை குளிர்வித்தது.

  • தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கக்கூடும். இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • ராமேஸ்வரம் - மண்டபம் பகுதியை இணைக்கும் பாம்பன் புதிய ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. கடல்வழியாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட பாலத்தில் ரயில் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.

  • கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி உள்ளது நிதி அளித்தும் சிலர் அழுதுகொண்டே இருப்பதாக பிரதமர் மோடி விமர்சனம்.

  • நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தால் கூட்டணி அமைக்க தயார் என பாஜகவிடம் கூற முடியுமா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்.

  • காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை வழங்கினால் மட்டும்தான் காங்கிரஸ் உடன் கூட்டணி என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா? மாநில உரிமைகளைப் பற்றி பேச திமுகவுக்கு மனசாட்சி இருக்கிறதா என்றும் அதிமுக பதிலடி.

  • தமிழ்நாட்டில் இடமே இல்லை என்ற பதிலைத்தான் பாஜகவுக்கு வழங்கிட வேண்டும் என கோவை கொடிசியாவில் நடைபெற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

  • மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதாசாரத்தில் அதிகம் உள்ளதா? என பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி.

  • 5 ஆயிரத்து 832 கோடி ரூபாய் தாது மணல் முறைகேடு விவகாரத்தில், வி.வி. மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் உள்ளிட்ட 21 நபர்கள் மீதும், 6 நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு.

  • கேரள சட்டமன்ற தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியை முதல்வர் பினராயி விஜயன் வழிநடத்துவார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி அறிவிப்பு.

  • ராம நவமியையொட்டி அயோத்தியில் இரண்டரை லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு. சந்தியா ஆரத்தி நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்.

  • நெதர்லாந்தின் லிஸ்ஸி நகரில் உள்ள கியூகென்ஹாஃப் மலர்த்தோட்டம். சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

  • ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம். குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.