மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. கொழும்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
இலங்கையில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து தமிழில் பதிவிட்ட பிரதமர் மோடி. இந்திய சமூகத்தினரின் அன்பான அரவணைப்பால், மிகுந்த நெகிழ்ச்சியடைந்ததாக பதிவு.
இலங்கை கடற்படையால் கடந்த மாதம் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனையின்றி விடுதலை செய்தது ஊர்காவல்துறை நீதிமன்றம். பிரதமர் மோடி இலங்கை பயணத்தையொட்டி அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தாமாக முன்வந்து நடவடிக்கை.
கச்சத்தீவு கைவிட்டு போக திமுகதான் காரணம் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குற்றச்சாட்டு. இலங்கையில் கச்சத்தீவு குறித்து பேச வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வலியுறுத்தல்.
சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாடு, கேரளாவுக்கு ஒரு ரூபாய் கூட நிதி இல்லை. மத்திய அரசு அளித்த தரவுகளை பகிர்ந்து கண்டனம் தெரிவித்த கேரள எம்பி.
உண்மையான, நியாயமான எல்லை நிர்ணயத்தை தமிழகம் கோருகிறது. தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பதிவு.
வக்ஃப் சட்ட மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது காங்கிரஸ். அரசமைப்புக்கு எதிரான தாக்குதல்களை எல்லா தளங்களில் இருந்தும் எதிர்ப்போம் என்று கருத்து.
கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு.
புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடை முன் 20 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை. டாஸ்மாக் கடையினாலேயே கொலை சம்பவங்கள் நடப்பதாக கூறி கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், உலகில் நாற்பது சதவீத வேலைகளுக்கு ஆபத்து. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.
அஜித்தின் மாஸான சண்டைக் காட்சிகளுடன் ரசிகர்களுக்கு விருந்து படைத்த "குட் பேட் அக்லி" படத்தின் ட்ரெய்லர். யூடியூபில் வெளியான 9 மணி நேரத்திற்குள் சுமார் 50 லட்சம் பார்வைகளை எட்டியது.
சென்னையில் கார் பார்க்கிங் தொடர்பான தகராறில் கைதான நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல். அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
ஐபிஎல் டி20 லீக் போட்டியில் மும்பையை வீழ்த்தியது லக்னோ அணி. 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி... சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தலைமையேற்கிறாரா எம்.எஸ். தோனி?.
டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் ருதுராஜ் காயம் காரணமாக விளையாடாவிட்டால், தோனி வழிநடத்த வாய்ப்பு.