காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

Headlines|அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள் முதல் தவெக தலைவர் விஜய் பேச்சு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள் முதல் தவெக தலைவர் விஜய் பேச்சு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு. மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்.

  • செந்தில் பாலாஜி வகித்த துறைகள் அமைச்சர் சிவசங்கர், முத்துசாமியிடம் ஒப்படைப்பு. பொன்முடியின் வனத்துறை, ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு.

  • அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து பால்வளத்துறை விடுவிப்பு. மனோ தங்கராஜூக்கு மீண்டும் பால்வளத்துறை வழங்கப்பட வாய்ப்பு.

  • அமைச்சரவை மாற்றம் பற்றி முதல்வர் பார்த்துக்கொள்வார் என கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

  • மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்வோம் என கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேச்சு.

  • மாநிலத்தில் சுயாட்சி பெறுவோம். மத்தியில் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் என மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் தந்த தீர்ப்பை பெற உதவிய வழக்குரைஞர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

  • பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்துச் செய்யக் கோரிய மனு. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

  • அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை. தேர்தல் ஆணையம் முன்பு இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இன்று நேரில் ஆஜர்.

  • தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி. கன்னியாகுமரி மற்றும் சென்னைக்கு அருகே, 4 இடங்களில் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கியது மத்திய அரசு.

  • 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியா?, ஸ்டாலினா என்றுதான் போட்டி என அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேச்சு.

  • தருமபுரி அருகே கோயில் உண்டியலில் திருட முயன்ற போது கை சிக்கியதால் தவித்த கொள்ளையன். இயந்திரம் மூலம் உண்டியலை வெட்டி, கொள்ளையனை மீட்ட தீயணைப்புத் துறை.

  • டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் இடதுசாரி அமைப்பினர் அபார வெற்றி. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்பு.

  • கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடக்கம். ஆட்சியை பிடிக்க லிபரல் மற்றும் கன்சர்வெடிவ் கட்சிகள் இடையே தீவிர போட்டி.

  • ஐபிஎல் தொடரில் 7ஆவது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி. டெல்லியை வீழ்த்தியதன் மூலம் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பு.

  • மேட்ரிட் ஓபன் டென்னிசில் சபலென்கா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம். பெல்ஜியம் வீராங்கனைக்கு எதிரான போட்டியில் போராடி வெற்றி.