காஷ்மீரில் பகல்காமில் பயங்கரவாதிகள் கொலைவெறித்தாக்குல். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு.
5 பயங்கரவாதிகள் ராணுவ சீருடையில் வந்து சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல். சுடும் முன் பெயரை கேட்டதாகவும் சம்பவ இடத்தில் இருந்த பெண் பேட்டி.
கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் உயிரிழப்பு. தமிழர்கள் சிலரும் காயமடைந்த நிலையில் உதவிகளை செய்ய ஐஏஎஸ் அதிகாரியை அனுப்பிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
காஷ்மீர் தாக்குதலை அடுத்து சவுதி அரேபிய பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் பிரதமர் மோடி. கொடூர செயலில் ஈடுபட்டவர்களை விட்டுவைக்கமாட்டோம் என்றும் நீதியின் முன் நிறுத்துவோம் என்றும் திட்டவட்டம்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முதலமைச்சர்கள் தாக்குதலுக்கு கண்டனம். இது போன்ற தாக்குதல்களை இனியும் அனுமதிக்க கூடாது என மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி வலியுறுத்தல்.
குற்றவாளிகளுக்கு தண்டனை தர இந்தியாவுக்கு துணை நிற்போம் என பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உறுதியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இத்தாலி பிரதமர் மெலோனி உள்ளிட்ட உலகத் தலைவர்களும் கண்டனம்.
பழனிவேல் தியாகராஜனின் சொல்லாற்றல் அவருக்கு பலமானதாக மட்டுமே இருக்க வேண்டும். பலவீனமானதாக மாறிவிடக்கூடாது என பிடிஆர்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரிய வழக்கு. தமிழக அரசின் மனு மீது இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், அகில இந்திய அளவில் 23ஆவது இடம்பிடித்து அசத்தல். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே முதலிடம்.
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர், யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றும் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.
போப் பிரானசிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க வாடிகன் நகரில் குவியும் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள். மறைந்த போப்பின் புகைப்படம், மெழுகுவர்த்தி ஏந்தியும் உலகம் முழுவதும் திரளானோர் பிரார்த்தனை.
ஐபிஎல்லில் நேற்றைய போட்டியில் லக்னோவை ஊதித்தள்ளி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேப்பிட்டல்ஸ். புள்ளிகள் பட்டியலில் 2ஆம் இடத்திற்கு முன்னேற்றம்.