Headlines pt
இந்தியா

Headlines|தாக்கலாகும் வக்ஃப் திருத்த மசோதா முதல் பரஸ்பர வரி விதிப்பு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தாக்கலாகும் வக்ஃப் திருத்த மசோதா முதல் பரஸ்பர வரி விதிப்பு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • கச்சத்தீவை மீட்பது குறித்து இன்று பேரவையில் தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், இலங்கை செல்லும் பிரதமர், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தீர்மானம்.

  • நாடாளுமன்றத்தில் வக்ஃப் திருத்த மசோதா இன்று தாக்கல். தவறாமல் பங்கேற்குமாறு தங்கள் கட்சி எம்பிகளுக்கு பாஜக, காங்கிரஸ் உத்தரவு.

  • திமுக கரை வேட்டி கட்டிவிட்டால், நெற்றியில் பொட்டு இருந்தால் அழித்துவிட வேண்டும் என திமுக மாணவர் அணி செயலாளர்கள் கூட்டத்தில் எம்பி ஆ.ராசா பேச்சு.

  • நித்யானந்தா இறந்து விட்டதாகப் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கைலாசா தரப்பு. கேஜிஎஃப் படத்தின் பிஜிஎம் உடன் நித்யானந்தா பேசும் வீடியோ வெளியீடு.

  • நாமக்கல் அருகே ஆன்லைன் ரம்மியில் 25 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த வங்கி துணை மேலாளர் தற்கொலை. கடன் அதிகம் பெற்ற நிலையில், பணத்தை இழந்ததால் மனமுடைந்து விபரீத முடிவு.

  • புதுக்கோட்டை அருகே சாலையில் சென்றபோது தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம். படுகாயமடைந்த 9 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

  • மியான்மரில் கடந்த 4 நாட்களாக பகலிரவு பாராமல் தொடரும் மீட்புப் பணிகள். நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளதால் இந்தியா, ரஷ்யா, சீன உள்ளிட்ட நாடுகள் உதவிக் கரம்.

  • இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு. இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

  • ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி. 34 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய பிரப்சிம்ரன் சிங்.

  • தெலங்கானாவில் நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் வென்ற நெல்லை பெண்கள். 100 கிலோ எடைப் பிரிவில் முதல் பரிசும், 65 கிலோ எடை பிரிவில் 2ஆம் பரிசும் பெற்று அசத்தல்

  • ஜி.வி.பிரகாஷ் குடும்பப் பிரச்னைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகை திவ்ய பாரதி பகிரங்கமாக விளக்கம். நெகட்டிவ்களை பரப்ப வேண்டாம், எல்லையை கடந்து பேச வேண்டாம் என்றும் பதிவு.