அமித் ஷா மட்டுமல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேச்சு. டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது எனவும் உறுதி.
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம். தோல்வி பயம் வந்துவிட்டதால், முதல்வர் இவ்வாறு பேசுவதாகவும் விமர்சனம்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என அதிமுகவைத் தொடர்ந்து பாஜகவும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்.
பெண்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தல்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை களமிறக்க உள்ளதாக சீமான் பேச்சு. விஜய்க்கு எதிராக வேறு மாநிலங்களில் இருந்து அறிக்கை விடுவதெல்லாம், வேடிக்கையாக இருப்பதாக பேட்டி.
இந்தியாவின் தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது என தக் லைஃப் பட விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேச்சு.
தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஆயத்தம். உச்ச நீதிமன்ற கருத்தை கோரி குடியரசுத் தலைவரின் பரிந்துரையை அனுப்பவும் திட்டம்..
உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்திருக்கிறது என துணை குடியரசுத் தலைவருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கருத்து.
திருமணமான அன்றே குழந்தை பிறக்காது என திமுக எம்பி பேச்சால் சர்ச்சை. பொன்முடியைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார் கல்யாண சுந்தரம் எம்.பி.
சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த பாமக. மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்த திருமாவளவன் .
சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம். தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி.
இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிராக தாக்குதல்கள் என்ற வங்கதேசத்தின் புகாருக்கு மத்திய அரசு மறுப்பு. பிறரை குறைகூறும் முன் உங்கள் நாட்டில் சிறுபான்மையினருக்கு முதலில் பாதுகாப்பு கொடுங்கள் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி.
2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது. பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு விளக்கம்.
தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை, சென்னையில் இன்று தொடங்குகிறது.
கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதைத் தடுக்க சிறப்புக் குழு அமைத்திடுக என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை.
செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயரவுள்ளதாக தகவல். இவ்வாண்டு இறுதிக்குள் 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணங்கள் உயர வாய்ப்பு.
போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா, உக்ரைன் இடையே மேற்கொண்ட மத்தியஸ்தத்திலிருந்து அமெரிக்கா விலகல். இரு தரப்பும் விரைந்து முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் வரை பேச்சுவார்த்தையை நிறுத்திவைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் சேர்ப்பு. அணிக்கு பலம் சேர்ப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் நம்பிக்கை
ஐபிஎல் தொடரில், சொந்த மண்ணில் தொடர்ந்து 3ஆவது தோல்வியை தழுவிய பெங்களூரு அணி. பஞ்சாப் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ட்ரெய்லருக்கு ரசிகர்கள் வரவேற்பு.
மருத்துவர் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் விளக்கம்.உடல்நிலை குறித்து தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என வேண்டுகோள்.