வக்ஃப் வாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட சில அம்சங்களுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். சட்டத்திருத்தத்தை எதிர்த்து எழுப்பப்பட்ட வாதங்களுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் உத்தரவு.
குடியரசுத்தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சனம். உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா என்றும் கேள்வி.
வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் வரவேற்பு. பிற்போக்குத்தனமான விதிகளை நீதித்துறை மறு ஆய்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பதிவு.
வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தவெக தலைவர் விஜய் வரவேற்பு. இஸ்லாமியர்களின் வயிற்றில் உச்ச நீதிமன்றம் பாலை வார்த்துள்ளதாக கருத்து.
கட்சியின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடு குறித்து பொது வௌியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு தலைமைக்கழகம் வேண்டுகோள்.
விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்.
சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம், கோயில் கோபுரம் போல் அலங்கரிக்கப்பட்ட விவகாரம்.. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயலுக்கு பாஜக, அதிமுக தலைவர்கள் கண்டனம்.
இறைநம்பிக்கை உள்ளவர்கள் கலைஞரை ஆண்டவராகத்தான் பார்க்கிறார்கள். நினைவிட அலங்கார சர்ச்சைக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.
பெண்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. வழக்குபதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறைக்கு எச்சரிக்கை.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு திடீர் பயணம்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசிக்க திட்டம்.
பாமக சார்பில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணி நியமனம் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.
தைத்திருநாளில் ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சர்களுக்கு புத்தாடை. திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து உள்ளிட்ட 210 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் சேகர் பாபு.
தமிழகத்தில் 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். ஒரு சில இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் . கேரளாவின் விய்யூர் சிறைச்சாலையிலும், சத்தியமங்கலம் சரணாலயத்திலும் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்.
ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.
நெல்லை மேலப்பாளையத்தில் பதுங்கியிருந்த நபரை கைது செய்தது காவல் துறை.
நெல்லையில் 8ஆம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம். மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் குற்றச்சாட்டு.
ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரம் ரூபாயை நெருங்கியது. 10 நாட்களில் சவரனுக்கு 5ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரிப்பு.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் மே முதல் வாரத்தில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு என மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் அல்லது பெண் ஒருவர் தலைவராக வாய்ப்புள்ளதாக தகவல்.
மனிதர்கள் வாழ ஏற்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்த பிரிட்டன் ஆய்வாளர்கள். உயிர் உருவாவதற்கான மூலக்கூறுகள் இருப்பதாக தகவல்.
ஐபிஎல் தொடரில் லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். 163 ரன்கள் என்ற இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து எட்டிப் பிடித்தது.
அஜித்தின் குட் பேட் அக்லி படம் வசூல் வேட்டை. உலக அளவில் வெளியான ஒரே வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்.