தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 16ஆம் தேதி துணைவேந்தர்கள் கூட்டம். உயர் கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை என அரசு அறிவிப்பு...
வக்ஃப் திருத்த சட்டத்தை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கொண்டு வந்தது அயோக்கிய செயல் என திமுக எம்.பி ஆ.ராசா குற்றச்சாட்டு.
வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு. காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து நடவடிக்கை.
கச்சத்தீவு மற்றும் நீட் விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்.
கட்சித் தலைவர் விவகாரத்தில் ராமதாஸ், அன்புமணி இடையே நீடிக்கும் கருத்து மோதல். இரு தரப்பிடமும் கட்சி நிர்வாகிகள் பேசிய நிலையில் ராமதாஸ் முன் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல்.
திமுக கூட்டணியை உடைக்க தன்னை துருப்புச் சீட்டாக பயன்படுத்த முயற்சி செய்ததாக திருமாவளவன் குற்றச்சாட்டு. ஆட்சியில் பங்கு எனக்கூறி ஆசைகாட்டியதாகவும் கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேச்சு.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் 5 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை. தப்பியோட முயன்ற குற்றவாளி என்கவுன்ட்டர்.
தமிழக - கேரள எல்லையான போடிமெட்டு பகுதியில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து. நல்வாய்ப்பாக 4 பேர் உயிர் தப்பினர்.
ஆந்திராவில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி.
ஜார்க்கண்டில் மத ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே மோதல். வன்முறையில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம்.
30 கிலோ வாட் லேசர் ஆயுத அமைப்பு மூலம் இலக்கை தாக்கி அழிக்கும் சோதனை. வெற்றிகரமாக நிகழ்த்தி அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் சாதனைப் பட்டியலில் இணைந்தது இந்தியா.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிக்காணிக்கை செலுத்திய துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி. தீ விபத்தில் மகன் உயிர் தப்பிய நிலையில் வேண்டுதலை நிறைவேற்றினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் எருது விடும் விழா கோலாகலம். காளைகள் முட்டியதில் 30 பேர் காயம்.
மார்ச் மாதத்தில் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி சாட் ஜிபிடி! கிப்லி கலை வடிவ படங்களால் சாடஜிபிடி-க்கு பெரும் வரவேற்பு.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி. மற்றொரு ஆட்டத்தில் மும்பையிடம் வீழ்ந்தது டெல்லி கேப்பிடல்ஸ்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிய மைல் கல் சாதனையை எட்டினார் விராட் கோலி. 100 அரைசதங்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் சாம்பியன். இறுதிப் போட்டியில் லோரென்சோ முசெட்டியை வீழ்த்தினார்.
சீனாவில் புழுதிப் புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து. பயணிகள் அவதி.
உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல். 34 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்.