Headlines pt
இந்தியா

Headlines|அதிமுக - பாஜக கூட்டணி முதல் சென்னை அணி மீண்டும் படுதோல்வி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அதிமுக - பாஜக கூட்டணி முதல் கட்சி பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேசிய ஜனநாயக் கூட்டணி. அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிபடுத்தியபின் சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு.

  • கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இடம்பெறுவார்களா என்ற கேள்விக்கு, அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என அமித் ஷா பேட்டி. குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கி செயல்படுவோம் என்றும் அறிவிப்பு.

  • மத்திய அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு தனது இல்லத்தில் இரவு விருந்து அளித்தார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்றும் உறுதி.

  • ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை வேரோடு வீழ்த்துவது முக்கியம் என்றும் அதிமுக - பாஜக கூட்டணி செய்து முடிக்கும் என்றும் பிரதமர் மோடி கருத்து.

  • பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் இழைத்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம். தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள் எனவும் பேச்சு.

  • தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டது குறித்து இன்று அதிகாரப்பூர் அறிவிப்பு. சென்னை ஸ்ரீவாரு மண்டபத்தில் பாஜக சார்பில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு.

  • பாமக தலைவர் விவகாரத்தில் ராமதாஸை சமாதானம் செய்ய தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற நிர்வாகிகள். சந்திக்க மறுத்ததால் மூன்றரை மணி நேரம் காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

  • பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பொறுப்பு பறிப்பு. திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.

  • திமுக துணைப் பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம். கட்சி பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் அமைச்சர் பொன்முடி.

  • டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாவது நாளாக புழுதிப்புயல். 2 பேர் உயிரிழப்பு, 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

  • வக்ஃப் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தில் நுழைந்து சூறையாடிய கும்பல்.

  • பீகாரில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நடத்திய கட்சி கூட்டம். எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் திரளாததால் கேலிக்கு உள்ளானார்.

  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலைச் செய்யக்கோரி நூற்றுக்கணக்கானோர் போராட்டம். தொடர் முழக்கமிட்டவர்களை கைது செய்து காவல் துறை நடவடிக்கை.

  • ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 5வது போட்டியிலும் தோல்வி. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி.

  • முதல் நாளிலேயே 30 கோடி ரூபாய் அள்ளிய குட் பேட் அக்லி திரைப்படம். வசூல் விவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு.