Headlines pt
இந்தியா

Headlines|சென்னை வந்த அமித் ஷா முதல் வசூலை அள்ளிக் குவிக்கும் GOODBADUGLY வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சென்னை வந்த உள் துறை அமைச்சர் அமித் ஷா முதல் வசூலை அள்ளிக்குவிக்கும் குட் பேட் அக்லி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மாநிலத் தலைவர் நியமனம், சட்டமன்றத் தேர்தல் வியூகம், கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்.

  • தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியீடு. இன்று பிற்பகலில் வேட்புமனு தாக்கல். அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல்.

  • கட்சியில் சேர்ந்து 10 ஆண்டு ஆகியிருந்தால் மட்டுமே போட்டியிட முடியும் என்ற விதியால் புதிய திருப்பம். தமிழக பாஜக தலைவர் மாற்றத்துக்கும் அமித் ஷா வருகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  • அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அமித் ஷா வருவதாகவும் அண்ணாமலை விளக்கம். அமித்ஷா தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை நிச்சயமாக நடைபெறும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் பேட்டி.

  • அமித் ஷா தமிழகம் வந்துள்ள சூழலில், பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ் .கூட்டணி விவகாரத்தில் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடிப்பதாக கூறப்படும் நிலையில் அதிரடி முடிவு.

  • தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில் தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற பாமக நிர்வாகிகள். பொருளாளர் திலகபாமாவை, ராமதாஸ் சந்திக்க மறுத்ததாக தகவல்.

  • கோவை பொள்ளாச்சி அருகே பூப்பெய்திய மாணவியை தனியாக அமரவைத்த விவகாரம். பள்ளி முதல்வர், தாளாளர் மற்றும் அலுவலக உதவியாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

  • நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்தோருக்கு, அதிமுக சார்பில் வரும் 19ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

  • தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் 16ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவுர் ராணாவுக்கு 18 நாள்கள் காவல் வழங்கியது என்ஐஏ சிறப்பு நீதிமன்றம். தனி இடத்தில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டம்.

  • 2019இல் பெகாசஸ் உளவு செயலியின் மூலம் அதிகம் ஒட்டுக்கேட்கப்பட்ட நாட்டவர்களின் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வெளியான தகவல்.

  • மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களின் பைகளில் கத்தி, சைக்கிள் செயின், ஆணுறைகள் கண்டெடுப்பு. ஆசிரியர்கள் நடத்திய திடீர் சோதனையின்போது காத்திருந்த அதிர்ச்சி.

  • சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் மகேந்திர சிங் தோனி. காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால் சென்னை அணியை வழிநடத்துகிறார்.

  • பெங்களூருவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி எளிதில் வெற்றி. 93 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார் கே.எல்.ராகுல்..

  • வசூலை அள்ளிக் குவிக்கும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம். முதல் நாளில் 30 கோடி ரூபாய் ஈட்டியதாக தகவல்.