பாலியல் பலாத்காரம் செய்ய முயல்பவர்களின் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் என்று பெண்கள் அமைப்பின் தலைவி ராஜகுமாரி அறிவுரை கூறியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அம்மாநில பெண்கள் அமைப்பின் தலைவி ராஜகுமாரி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், பெண்கள் கையில் கத்தியை வைத்துக் கொள்ளவேண்டும். வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பவனின் ஆணுறுப்பை வெட்டிவிட வேண்டும்’ என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ‘பெண்கள் எதிர்கொள்ளும் அட்டூழியங்களை பார்த்துதான், இதை சொல்கிறேன். பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்கள் மீது நிர்பயா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை தெருவில் அழைத்து சென்று செருப்பு, துடைப்பத்தால் அடிக்கவேண்டும். பின்னர் சிறையில் அடைக்கவேண்டும்’ என்றார்.