ஒடிசா ரயில் விபத்து twitter pages
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: இதற்குமேல் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

ஒடிசாவில் நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட ரயில் விபத்தில், மீட்புப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மேலும் சேதமடைந்த ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியிலும் தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியிலும் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

PT WEB

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அதேநேரம் ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்பட்டு வருகிறது. இந்த ரயில் விபத்தில் தற்போது வரை 288 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், ஒடிசாவில் நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட ரயில் விபத்தில், மீட்புப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மேலும் சேதமடைந்த ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியிலும் தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியிலும் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இதற்குமேல் வேறு யாராவது உயிருடன் இருந்து அவர்களை மீட்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் பேசப்பட்டு வருகிறது.