இந்தியா

அதிகரிக்கும் மாசு... கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் டெல்லி அரசு மும்முரம்...!

webteam

மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாட்டின் தலைநகரம் முழுவதும் பல இடங்களில் புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

டெல்லியில் காற்று மாசு ஒவ்வொரு ஆண்டும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. காற்றில் மாசு அதிகரிப்பதால், அதன் தரம் குறைந்து கொண்டே போகிறது.டெல்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவது பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

 மாசு கட்டுப்பாட்டை குறைக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 7 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாட்டின் தலைநகரம் முழுவதும் பல இடங்களில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் மாசு எதிர்ப்பு இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து தண்ணீரை பீச்சி அடித்து மாசு பரவலாக கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.