இந்தியா

போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு : கர்நாடகாவில் இருவர் உயிரிழப்பு

போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு : கர்நாடகாவில் இருவர் உயிரிழப்பு

rajakannan

Anti-CAA protests: 2 protesters killed in police firing in Mangaluru

கர்நாடகாவின் மங்களூரு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூரு நகரில் போராட்டம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தடையை மீறி பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பெங்களூருவில் டவுன்ஹால் பகுதியில் தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ‌பிரபல வரலா‌ற்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டார். மங்களூருவில் போராட்டம் நடத்தியவர்கள், காவல் துறை மீது கற்களை வீசிய நிலையில், தடியடி நடத்தப்பட்டது.

இந்நிலையில், பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில், ஜலீல்(49), நவுசீன்(23) ஆகிய இருவர் உயிரிழந்ததை மங்களூர் கமிஷ்னர் ஹர்ஷா உறுதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.