இந்தியா

டெல்லியில் வன்முறை: காவலர் உயிரிழப்பு

டெல்லியில் வன்முறை: காவலர் உயிரிழப்பு

Rasus

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மற்றும் எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது இந்த இரு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தின் பல்வேறு
இடங்களிலும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வன்முறையில் தலைமைக் காவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இன்னும் சில மணி நேரங்களில் டெல்லி வரவுள்ள நிலையில் இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லியின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர போலீஸ் அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.