இந்தியா

நெட்டிசன்களை ஈர்த்த கழிவறை சண்டை: பாஜக- காங்கிரஸ் கடும் போட்டி

நெட்டிசன்களை ஈர்த்த கழிவறை சண்டை: பாஜக- காங்கிரஸ் கடும் போட்டி

Rasus

கர்நாடக தேர்தல் நெருங்கும் நிலையில் ட்விட்டரில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் இடையே நடந்த கழிவறைச் சண்டை, நெட்டிசன்களின் கவனத்தைக் கவர்ந்தது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் மன்மோகன் சிங் அரசைவிட குறுகிய காலத்தில் அதிக கழிவறைகளை மோடி அரசு கட்டியுள்ளதாக பாரதிய ஜனதா ட்விட்டரில் புள்ளி விவரம் வெளியிட்டது.

அதில் மன்மோகன் ஆட்சியில் 350 கோடி ரூபாயில் 20 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டதாகவும், ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாயில் 34 லட்சம் கழிவறைகளை மோடி அரசு கட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்படியெனில் ஒரு கழிவறைக்கு மன்மோகன் அரசு 1,750 மட்டுமே செலவிட்ட நிலையில், மோடி அரசு 6,177 செலவிட்டதா..? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த பாரதிய ஜனதா, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதாகவும், இந்த செலவு அதிகரிப்புக்கான காரணத்தை அதுவே சொல்ல வேண்டும் என்றும் பதிவிட்டது.