இந்தியா

ஒரு நாள் சாப்பாடுக்கு ரூ.13 போதும்: இன்னா வருது அன்னபூர்ணா

ஒரு நாள் சாப்பாடுக்கு ரூ.13 போதும்: இன்னா வருது அன்னபூர்ணா

webteam

தமிழகத்தில் அம்மா உணவகம் போல உத்தரபிரதேசத்தில் அன்னபூர்ணா போஜனாலயா திட்டம் விரைவில் துவக்கபப்ட இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பின், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதில் ஒன்றாக, ஏழைகளுக்காக மலிவு விலை உணவு விடுதிகளை திறக்க இருக்கிறார். இதற்கு அன்னபூர்ணா போஜனாலயா என்று பெயரிட்டுள்ளனர். இதில் காலை உணவு 3 ரூபாய்க்கு கிடைக்கும். இதில் இட்லி, சாம்பார், போஹா, பகோடா, டீ ஆகியவை உண்டு.

மதிய உணவு 5 ரூபாய். இதில் சாப்பாடு, சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள் இருக்கும். இரவு உணவும் காலை டிபனை போன்றதே. ஒரு நாள் உணவுக்கு 13 ரூபாய் இருந்தால் போதும். இதற்காக முதலிலேயே பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

‘இந்தத் திட்டத்தின் முழு வடிவமும் ரெடியாகிவிட்டது. வரும் 12-ம் தேதி முதல்வரிடம் விளக்க இருக்கிறோம். முதல் கட்டமாக 14 மாநகராட்சிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, பின்னர் விரிவுப்படுத்தப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.