இந்தியா

மத்திய அமைச்சர் திடீர் மரணம்

மத்திய அமைச்சர் திடீர் மரணம்

Rasus

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே இன்று காலமானார். அவருக்கு வயது 60.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியை சேர்ந்தவர் அனில் மாதவ் தாவே. இந்த மாநிலத்தில் இருந்து ராஜ்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சராக பதவி வகித்தார். சுற்றுச்சூழலை காப்பதில் தனிக்கவனம் செலுத்தி வந்தார். உடல் நலக்குறைவுக் காரணமாக டெல்லியில் இன்று அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், ‘தாவேவின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சுற்றுச்சூழலை காப்பதில் தனிக்கவனம் செலுத்தி வந்தவர் தவே. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.