வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.3,716 கோடி மதிப்புள்ள மும்பை வீட்டை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்களின் சொத்துகளின் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் மீதான இந்த நடவடிக்கை வர்த்தக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது, கடன் பணத்தில் முறைகேடாக வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கியது உள்ளிட்ட நிதி மோசடி புகார்களில் சிக்கியுள்ளது. குறிப்பாக, 2017 மற்றும் 2019-க்கு இடையில் யெஸ் பேங்க் (Yes Bank) மூலம் சுமார் ரூ. 3,000 கோடி கடனைப் பெற்று, போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பாரத ஸ்டேட் வங்கி (SBI), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் விளம்பரதாரர் அனில் அம்பானியை 'மோசடியாளர்' என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் சிலா்மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.3,716 கோடி மதிப்புள்ள மும்பை வீட்டை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. பாலி ஹில் பகுதியில் உள்ள இந்த 17 மாடி சொகுசு வீடு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தொடர்பான பணமோசடி விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்களின் சொத்துகளின் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் மீதான இந்த நடவடிக்கை வர்த்தக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.