இந்தியா

அதிநவீன முதல் இந்திய சொகுசுக் கப்பல்

webteam

இந்தியாவின் முதல் அதிநவீன சொகுசுக் கப்பல் ‘அங்ரியா’ தனது பயணத்தை நாளை தொடங்கவுள்ளது. 


 
இந்திய மக்களிடையே கப்பல் பயணம் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்தியாவின் முதல் அதிநவீன சொகுசுக் கப்பல் சேவை தொடங்கபட உள்ளது. மராத்திய கடற்படை முதல் அட்மிரல் கன்ஹோஜி ஆங்கிரே நினைவாக அங்ரியா என்ற பெயரில் சொகுசுக் கப்பல் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த ஆடம்பர கப்பலில், உணவகம், தங்கும் அறைகள்,மதுபானக்கூடம்,ஸ்பா உள்ளிட்ட சகல வசதிகளும் நிறைந்துள்ளன.

இந்த சொகுசுக் கப்பலில் எட்டு வகையில் மொத்தம் 104 அறைகள் உள்ளன. மேலும் இரண்டு உணவகங்கள், ஆறு மதுபானக்கூடங்கள், நீச்சல் குளங்கள் என பல ஆச்சிரியங்கள் கொண்டுள்ளது. கப்பலின் சிறப்பம்சமாக நீருக்கடியில் உள்ள கப்பலின் பகுதியில் ஆடம்பர அறைகள் இருக்கின்றன. கொங்கன் கடலோர கலாச்சாரத்தை பிரதிபல‌க்கும் ஓவியங்கள், போர் ஆயுதங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

மும்பை துறைமுகத்தில் இருந்து, கோவா வரை ‘அங்ரியா’ கப்பல் வாரத்துக்கு நான்கு முறை இயக்கப்படுகிறது. வரும் 24ஆம் தேதி முதல் அங்ரியா சொகுசுக் கப்பலில்  பயணிகள் பயணம் மேற்கொள்ள ஆறாயிரம் முதல் 10 ஆயிரம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.