அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணும், அவரது ஆறு வயது மகனும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர், நாரா அனுமந்தராவ். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 9 ஆண்டுகளாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய போது அனுமந்த ராவின் மனைவி சசிகலாவும், 6 வயது மகன் அனீஷூம் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளனர். கொலை செய்த நபர் மற்றும் காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல் தெரியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.