ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்திய இதிகாச நாயகர்கள் மேற்கத்திய சூப்பர் ஹீரோக்களைவிட பல மடங்கு மேன்மை வாய்ந்தவர்கள் எனத் தெரிவித்தார். திருப்பதி சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில், சூப்பர்மேனை விட ஆஞ்சநேயர், அயன்மேனை விட அர்ஜுனன் சிறந்தவர் என பெருமிதத்துடன் கூறினார்.
இந்திய இதிகாச நாயகர்கள் மேற்கத்திய சூப்பர் ஹீரோக்களைவிடப் பல மடங்கு உயர்ந்தவர்கள் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டினார்.
திருப்பதி தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாரதிய விஞ்ஞான் சம்மேளனத்தில் பேசிய அவர், ஹாலிவுட் கதாபாத்திரங்களான சூப்பர்மேனைவிட ஆஞ்சநேயர் அதிக பலம் கொண்டவர் என்றும், அயன்மேன் அல்லது பேட்மேனை விட அர்ஜுனன் மிகச்சிறந்த போர்வீரன் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இன்றைய தலைமுறையினர் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கிவிடாமல் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் அறநெறிகளைக் கற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.