இந்தியா

ஆந்திரா: நின்றிருந்த வாகனம் மீது மோதிய விபத்து: 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆந்திரா: நின்றிருந்த வாகனம் மீது மோதிய விபத்து: 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

kaleelrahman

ஆந்திராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே பல்நாடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் மீது டாடா ஏஸ் வாகனம் மோதியதில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். குண்டூர் பகுதியை சேர்ந்த 38 பேர் டாடா ஏஸ் வாகனத்தில் ஸ்ரீசைலம் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது பல்நாடு என்ற பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக் மீது டாடா ஏஸ் வாகனம் வேகமாக மோதியது.

இதில் வாகனம் தலைகீழாக உருண்டது. இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டு குர்ஜாலா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், உயிரிரந்தவர்களின் 9 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

வுpசாரணையில், குண்டூர் பகுதியை சேர்ந்த 38 பேர் ஸ்ரீசைலம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து நடந்துள்ளதாகவும், டாடா ஏஸ் வாகனத்தின் ஒட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதாலேயே விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.