இந்தியா

ஆந்திரா : படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

ஆந்திரா : படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

webteam

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆந்திரா மாநிலம் தேவிபட்டணம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்றில் 61 பேர் பயணம் செய்தனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பயணம் செய்த 61 பேர் நீரில் மூழ்கிய நிலையில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் நீரில் மூழ்கிய 33 பேரை தேடி வந்தனர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேரை தேசிய பேரிட மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இரண்டு தேசிய பேரிட மீட்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. 

அனைத்து படகு சேவைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் கோதாவரி நதியில் படகு நடவடிக்கைகள் குறித்த உரிமங்கள், மற்றும் பிற விவரங்களை சரிபார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.