இந்தியா

ஆந்திர காவல்நிலைய கணினிகள் முடக்கம்... பணம் கேட்டு மிரட்டல்

Rasus

ஆந்திர காவல்நிலைய கம்யூட்டர்களை அடையாள‌ம் தெரியாத நபர்கள் முடக்கியதோடு பணம் கேட்டு மின்னஞ்சல் மூலம் மிரட்டியுள்ளதாக ஆந்திர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆந்திராவின் சித்தூர், விஜயவாடா, திருப்பதி, சீலேரி, குண்டூர், ராஜமந்திரி உள்ளிட்ட பல்வேறு காவல்நிலைய கணினிகளை அடையாளம் தெரியாத நபர்கள் முடக்கினர். அதோடு பாஸ்வேர்டை தருவதற்கு பணம் கேட்டு திருப்பதி எஸ்.பி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து திருப்பதி மேற்கு காவல்நிலைய எஸ்.பியின் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சரிசெய்யும் பணியில் தொழில்நுட்பப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் சரிசெய்யப்படும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.